முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா பேருந்து விபத்தில் 6 பேர் பலி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்

புதன்கிழமை, 25 மே 2022      இந்தியா
Maumta-Banerjee 2022 01 23

Source: provided

கொல்கத்தா : ஒடிசா பேருந்து விபத்தில் 6 பேர் பலியானதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பேருந்து சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எங்கள் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. காயமடைந்த பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இறந்தவர்களின் விரைவான பிரேத பரிசோதனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்கள் வீடு திரும்ப உதவுவதற்காக மேற்குவங்க நிர்வாகம் ஒடிசா அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது. பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து