முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்:நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக வாழ்கிறேன்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 24 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-23

சென்னை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காகத் திட்டங்களை தீட்டினான், மாநிலத்தை வளர்த்தெடுத்தான் என்றும் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம் என சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி கவர்னர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து 3 நாட்கள் அவை செயல்பட்ட நிலையில் கவர்னர் உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பதிலுரை அளித்து வருகிறார். முதல்வரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்து அவையில் பங்கேற்கவில்லை.

பதிலுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி அடைந்துள்ள. மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறது. ஆறாவது முறை ஆட்சி அமைந்த போது, அது விடியல் ஆட்சியாக அமையும் என்றோம். அந்த விடியலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கடந்து 5 ஆண்டுகள், வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் நான் பார்க்கிறேன் என்றார்.

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் ஆகும். மாதம் தோறும் ரூ.800 முதல் 1,200 வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கிறார்கள். அதேபோல், 1 கோடியே 31 லட்சம் மகளிர் மாதம் தோறும்ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இதுவரை ஒவ்வொரு மகளிரும் ரூ.29,000 பெற்றுள்ளார்கள். இதனை எங்க அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என்று மகளிர் பெருமையுடன் சொல்கிறார்கள் என பேரவையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அளவுக்கு அதிகமான சோதனைகள் எதிர்கொண்ட எனக்கு, எந்த சோதனைகளும் புதிதல்ல. என்னைச் சீண்டிப்பார்ப்பவர்கள் மனசுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என் மனதை எதுவும் செய்துவிடாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான். மக்களுக்காகத் திட்டங்களை தீட்டினான். மாநிலத்தை வளர்த்தெடுத்தான். இவை அனைத்து வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மை என்றார்.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று இன்றுடன் (நேற்று) 1,724 நாட்கள் ஆகின்றன. இதுவரை 8,655-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 15,117 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். பிற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன். 71 முறை மாவட்ட அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 44 லட்சத்து 44 ஆயிரத்தி 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். மக்களுக்காக நான் செய்த அனைத்தும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து