முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு

புதன்கிழமை, 8 ஜூன் 2022      ஆன்மிகம்
Sabarimala 2021 07 16

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோவிலில்  ஆனி மாத பூஜைக்காக  கோயில் நடை வருகிற 14-ம் தேதி  திறக்கப்பட உள்ளது.  

இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறுகிறது.  இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.  தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

வழக்கம் போல் இணையதள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!