முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெய் ஆகாஷ் நடிக்கும் அமைச்சர் ரிட்டன்ஸ்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
Jai-Akash 2022 06 13

Source: provided

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரிப்பில் டி.ஜெயலக்ஷ்மியின் கதை, வசனத்தில், திரைக்கதை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி, சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். வி.இ.இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.  இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா:  “நான் இசையமைத்து 10 வருடங்கள் ஆகிறது. 10 வருடங்களுக்கு பிறகு ஜெய் ஆகாஷ் என்னிடம் வந்து ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ படத்திற்கு இசையமைத்து தர வேண்டும் என்றார். நானும் இசையமைத்து கொடுத்திருக்கிறேன். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. ஜெய் ஆகாஷை எனக்கு நீண்ட வருடங்களாக தெரியும். கடுமையான உழைப்பாளி, சினிமாவில் பல வருடங்களாக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார், அவர் நிச்சயம் முன்னணி ஹீரோ ஆவார் என்றார். ஜெய் ஆகாஷ் பேசுகையில், “இந்த படத்திற்காக எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி . ‘அமைச்சர் ரிட்டன்ஸ்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!