முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பிரதமருக்கு சைனஸ் அறுவை சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2022      உலகம்
Boris-Johnson 2022 01 30

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சைனஸ் தொந்தரவு காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால், அவருக்கு லண்டனில் உள்ள நேஷனல் ஹெல்த் சர்வீஸ் அரசு மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மருத்துவமனையில் அவருடன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் உடன் இருந்தார். 

இது குறித்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் மேக்ஸ் பிளெய்ன் கூறுகையில், முன்கூட்டி திட்டமிட்டபடியே அறுவை சிகிச்சை நடந்தது. வழக்கமான மருத்துவமனை நடைமுறைகளுக்கு பிறகு, இல்லம் திரும்பிய பிரதமர் ஓய்வில் உள்ளார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!