முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமியில் தீபிடித்த பயணிகள் விமானம்: 126 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      உலகம்
USA-Miami 2022-06-22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த ரெட் ஏர் பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது எம் டி 82 ஜெல் லைனர் வகை விமானத்தின் முன்பக்க லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டதால் விமானம் ஓடுதளத்தில் லேசாக மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்புப் படையினர், ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 126 பயணிகளும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் லேசான தீக்காயம் அடைந்த 3 பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மற்ற பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து மியாமி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!