முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பேச்சுவர்த்தை

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Rajnath 2022-06-22

Source: provided

புதுடெல்லி : இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். 

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவர்த்தை நடத்தினர். 

கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கிடையே இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது குறித்தும் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு பணிக்குழுவை நிறைவேற்றுவதற்கு இருதரப்பும் உறுதி பூண்டனர். 

கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்கள் இடையே நடைபெற்ற காணொலி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட "ஜெனரல் ராவத் இளைய அதிகாரிகள் பரிமாற்று திட்டத்தை" தொடங்குவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து