முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
Kanimozhi

தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்  என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது, இனிமேல் எந்த காலத்திலும் பா.ஜ.க.வோடு நாங்கள் கூட்டணி சேர மாட்டோம், அவங்க தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவிட்டு, போன தேர்தலில் அவங்க கூட கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி தேர்தல் வியூகம் அமைக்கிறோம் என்று சொல்லி யார் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்களை விட மிகப்பெரிய துரோகிகளாக அ.தி.மு.க. அவங்ககூட போய் சேர்ந்துவிட்டது.அதனால் தான் அவர்களை வீடு வீடாக போய் அடையாளம் காட்டக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

மத்திய அரசாங்கம் நம் தமிழ் அடையாளங்கள் மீது நம்முடைய சரித்திரத்தை மாற்றணும், மொழியை மாற்றணும், தொகுதி சீரமைப்பு என்று சொல்லி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை குறைக்க நினைக்கக்கூடிய ஒரு பா.ஜ.க. அரசு ஆட்சி நடக்கிறது. இன்று 39 பேராக இருப்பது நாளை 20 பேராக குறைந்தால் அவ்வளவு பெரிய மன்றத்தில் நாம் பேசுவது எடுபடாது. அதனால் அந்தநிலையை நாம் அடைந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றவர் நம் முதல்-அமைச்சர் .

புதிதாக அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருவேன் என்று நினைத்து எது மத்திய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை. என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு சென்று, அதே நேரத்தில் நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து