முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
Tarn-1 2025-07-09

சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் செம்மங்குப்பம் அருகே நேற்று முன்தினம் காலை பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த சம்பவத்தில் 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர்.பள்ளி வேன் டிரைவரும், மற்றொரு மாணவனும் படுகாயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தின்போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே விபத்துக்கு காராம் என தெரியவந்துள்ளது. 

ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியின்போது தூங்கியதே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வெ கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சட்டப்பிரிவுகளின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பப்ட்டுள்ளது.

இந்த நிலையில், செம்மங்குப்பம் ரயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து