Idhayam Matrimony

இளம் வீரருக்கு கொலை மிரட்டல்: உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      விளையாட்டு
India-England 2022-06-22

உத்தரகாண்ட் மாநிலத்தில் இளம் கிரிக்கெட் வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 

பயிற்சியாளரால்...

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயது பேட்ஸ்மேனான ஆர்யா சேத்தி கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மாநில கிரிக்கெட் வீரரான ஆர்யா அந்த அணியின் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்தபோது, பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசிய நிர்வாகிகள், இது வெளியே தெரியவந்தால் கொலை செய்துவிடுவோம் என ஆர்யாவை மிரட்டியுள்ளனர். 

ரூ.10 லட்சம்...

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மஹிம் வர்மாவை ஆர்யாவின் தந்தை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது மஹிம் வர்மா ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் இல்லையெனில் அவர்கள் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்துவிடுவார்கள் என்று மிரட்டியதாக, 21 வயது பேட்ஸ்மேனான ஆர்யா சேத்தியின் தந்தை ரவி சேத்தி கூறினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போலீசர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

7 உறுப்பினர்கள்... 

இந்நிலையில், உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா உட்பட 7 உறுப்பினர்கள் மீது சதி, மிரட்டி பணம் பறித்தல், பணம் கேட்டு மிரட்டல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மஹிம் வர்மா பிசிசிஐயின் முன்னாள் துணைத்தலைவர் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து