எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டது.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட நெடுஞ்சாலையில் 1,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றனர். சாலை துப்புரவு பணிகளை நேரில் கண்காணித்து வரும் துணை ஆணையர் ராம்பன், முசரத் இஸ்லாம் கூறுகையில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 30 நிலச்சரிவுகளில் 25, மண்சரிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
ராம்பன் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் 33 இடங்களில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பனிஹால் ரம்பன் செக்டாரில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் மாலை வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை தொடர்ந்து போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதால், சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ராம்சூ-ராம்பன் செக்டார் பகுதியில் இன்னும் மழை பெய்து வருகிறது, மேலும் புதிய நிலச்சரிவு ராம்பன், ரோம்பாடி அருகே நெடுஞ்சாலையைத் தாக்கியுள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


