முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இன்று ஜெர்மனி செல்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      இந்தியா
modi-1-2021-12-16

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இன்று (ஜூன்-25) பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று ஜெர்மனி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் வினய் க்வாட்ரா தெரிவித்துள்ளார். அங்கு ஜூன் 26, 27 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குடியரசு மற்றும் சர்வதேச உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பயணத்தை முடித்தபின் ஜூன் 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். அங்கு மறைந்த அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து