எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 4 மாதங்களில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. புதிதாக 17,336 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 13,313 ஆக இருந்த நிலையில், நேற்று 17 ஆயிரத்தை தாண்டியது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டுவது கடந்த 124 நாட்களில் முதல் முறை ஆகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 5,218 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு பிப்ரவரி 11-ந் தேதிக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளாவில் புதிதாக 3,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1,934 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது கடந்த பிப்ரவரி 4-ந் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரு நாள் பாதிப்பில் அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,063 பேர், அரியானாவில் 872 பேர், கர்நாடகாவில் 858 பேர், மேற்கு வங்கத்தில் 745 பேர், உத்தர பிரதேசத்தில் 634 பேர், தெலுங்கானாவில் 494 பேர், குஜராத்தில் 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 13,029 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 56 ஆக உயர்ந்தது.
தற்போது 88,284 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 4,294 அதிகம் ஆகும். கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 7 மரணங்கள், நேற்று முன்தினம் பஞ்சாபில் 2 பேர், மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 13 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.
இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 77 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் 13,71,107 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று முன்தினம் 4,01,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.98 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


