முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் தொடர்ந்து 3-வது நாளாக அரசு போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      இந்தியா
Puducherry-bus 2022-06-25

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பஸ் ஊழியர்களை தாக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 3வது நாளாக நேற்றும் அரசு போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் அரசு பஸ் ஊழியர்களுக்கும், தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில்,. பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பஸ்கள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பணிமனையில் ஓய்வெடுத்தன. பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடாததால் கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு வருவோர் பாதிக்கப்பட்டனர். 

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. முன் அறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை, காரைக்காலை சேர்ந்த பி.ஆர்.டி.சி. ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் பணி செய்யும் போது பாதுகாப்பு வேண்டும் , பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறி அரசு போக்குவரத்து பணியாகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து