எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, கவர்னர் மாளிகையில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே (58) புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வரும் திங்கள்கிழமை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், துணை சபாநாயகர் முடிவெடுக்கும் வரை முதல்வர் உள்பட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் ஏற்கனவே முதல்வர் உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வலியுறுத்தினார். இந்த மனு ஜூலை 11-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


