எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது, வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடு முழுவதும் நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
அவமதிக்கும் வகையில்...
பா.ஜ.கவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது டுவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டு நீக்கினார்.
இந்தியாவுக்கு கண்டனம்...
இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக உதய்பூரில் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் கடந்த ஜூன் 10-ம் தேதி, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து இருந்தார். அதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கன்னையா லால் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தனர்.
கொடூரமாக கொலை...
இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுவதாகவும், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கன்னையா லால் காவல்துறையில் புகார் கூறி இருந்தார். இதனிடையே ஜூன் 28-ம் தேதி தையல் கடையைத் திறந்து பணி செய்து கொண்டிருந்த கன்னையா லாலை இழுத்துத் தெருவில் போட்டு, அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்த இருவர், அக்கொடூரச் செயலை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டனர்.
கடும் கண்டனம்...
இந்நிலையில், நுபுர் சர்மாவின் பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த், "தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் கண்டோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றுவேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார். நுபுர் சர்மா தன் மீதான அத்தனை வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் தான் நீதிமன்றம் இந்தக் கருத்தைக் கூறியுள்ளது.
தனி நபராக காரணம்...
நீதிபதி சூரிய காந்த் மேலும் கூறுகையில், "மனுவில் நுபுர் சர்மா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார். உண்மையில் அவருக்கு அச்சுறுத்தலா இல்லை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்று நாம் பார்க்க வேண்டும். நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்தப் பெண் ஒரு தனி நபராகக் காரணமாகியுள்ளார். நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.
டெல்லி காவல்துறை...
நூபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்ததே, அதை டெல்லி காவல்துறை தொட்டுக்கூட பார்க்கவில்லை. ஆனால் நூபுர் சர்மா அளித்த புகாருக்கு உடனே ஒருவரைக் கைது செய்திருக்கிறீர்கள் என்று டெல்லி காவல்துறையை கண்டித்த நீதிபதி, ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. அது ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சிக்கலை எவ்வாறு விவாதிக்க முடியும்.
நாட்டு மக்களிடம்...
ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் சொல்லிவிட முடியாது. உதய்பூரில் நடந்த தையல்காரரின் கொலைக்கு நூபுர் சர்மாவின் பொறுப்பற்ற செயல்களே காரணம். நூபுர் சர்மா நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவரது வழக்குரைஞர் சொல்வதும் பொறுப்பற்றதாக உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நூபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களிடம் நூபுர் சர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.