முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Iran 2022 07 02

Source: provided

டெக்ரான் : ஈரானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில் கூறப்படுவதாவது, 

ஈரானின் தென்மேற்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. ஈரானில் ஹர்மோஸ்கன் மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஈரானில் கடந்த நவம்பர் மாதம் இரு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டன.

இதில் ஒருவர் பலியானார். பல வீடுகளில் சேதம் அடைந்தன. 1990-ம் ஆண்டு 7.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்ட போது சுமார் 40,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!