முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை : அலைமோதிய வாடிக்கையாளர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      தமிழகம்
Kasimat 2022 07 03

Source: provided

சென்னை : வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு 2 வாரங்களாக காசிமேட்டில் மீன்களின் விலை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் , தற்போது விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது.

அதே சமயம் மீன்களின் வரத்தும் அதிகளவிலையே இருக்கிறது . பெரிய விசைப்படகுகள் , நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் நேற்று மீன்களைப் பிடித்து விற்பனைக்காக கரைக்கு திரும்பினர். 

இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. மீன்வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று  அலைமோதியது. இந்த சூழலில் கடந்த வாரத்தை விட நேற்று மீன்கள் விலை அதிகரித்திருந்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து