LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 1.7.2022 அன்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஒரு பகுதியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்திலேயே பயணம் மேற்கொண்டு, இப்போட்டியில் பங்குபெற உள்ள போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள் பயணிக்கும் வழித்தடங்களை ஆய்வு செய்தார். மேலும், மின்வாரியப் பணிகள், சுகாதாரப் பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் அமைப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினையும், பூஞ்சேரி பகுதியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சர்வதேச தரத்தில் 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்கத்தினையும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் தலைமைச் செயலாளர் பார்வையிட்டார். மாமல்லபுரத்தில் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தை பார்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் மாமல்லபுரம், பேருந்து நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், மாமல்லபுரம், கடற்கரை கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளையும், குளம் சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார்.
இறுதியாக, சென்னை விமான நிலையத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்களை வரவேற்று அழைத்துச் செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 18 hours 3 min ago |
கடாய் வெஜிடபிள்![]() 2 days 20 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 5 min ago |
-
இந்திய லெஜண்ட்ஸ் அணி கேப்டன் ஆனார் கங்குலி
12 Aug 2022கொல்கத்தா : உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு
12 Aug 2022கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
நாட்டில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 16,561 பேருக்கு தொற்று
12 Aug 2022புதுடெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
2024-ல் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ் திட்டவட்டம்
12 Aug 2022பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர்
12 Aug 202222-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது.
-
2022-ம் ஆண்டு சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
12 Aug 2022சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
முன்கூட்டியே தொடங்குகிறது 'பிபா உலகக் கோப்பை 2022' : முதல் போட்டியில் கத்தார்-ஈகுவேடார் மோதல்
12 Aug 2022தோஹா : கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உணவுத்திருவிழா தொடக்கம்: பீப் பிரியாணி அரங்கு இல்லாதது ஏன்? அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
12 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு இல்லாதது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் தொடரும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை சென்னை ஐகோர்ட் நீதிபதி வேதனை
12 Aug 2022நாம் ராஜா ராணி இல்லை, நாட்டின் குடிமக்கள்தான் ராஜா, ராணிகள் என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை இன்னும் தொட
-
நாடு முழுவதும் பத்து நாட்களில் 1 கோடி தேசியக் கொடிகள் விற்பனை: மத்திய அரசு
12 Aug 202210 நாட்களில் சுமார் 1 கோடி தேசிய கொடிகளை 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: இறுதி செய்ய 17-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
12 Aug 2022சென்னை : பொறியியல் புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக, 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்
-
விமர்சனத்தைத் தொடர்ந்து இலவச பஸ்கள் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாற்ற நடவடிக்கை
12 Aug 2022விமர்சனத்தை தொடர்ந்து இலவச பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
-
தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Aug 2022சென்னை : இன்று முதல் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ள
-
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Aug 2022சென்னை : ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பெருங் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
12 Aug 202275-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
-
வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு: சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
12 Aug 2022சென்னை : வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தின் அனைத்து நகராட்சி, கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் : தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
12 Aug 2022சென்னை : தமிழகத்தின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடியை ஏற்ற வ
-
நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு: மத்திய அரசு
12 Aug 2022நெல்லை : நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
-
உலக யானைகள் தினம்: யானைகளை பாதுகாப்போம்: : பிரதமர் நரேந்திரமோடி டுவீட்
12 Aug 2022புதுடெல்லி : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி டுவீட் செய்துள்ளார்.
-
நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவால் 10 லட்சம் பேர் பசி போக்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 Aug 2022ஓராண்டில் நிகழ்ச்சிகளில் மீதம் இருக்கும் உணவைப் பெற்று 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
சுதந்திர தினவிழாவில் எவ்வித பாகுபாடின்றி தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
12 Aug 2022சென்னை : சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள
-
டி-20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ வரலாற்று சாதனை
12 Aug 2022டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிராவோ.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி பலி
12 Aug 2022ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி உயிரிழந்தார்.
-
சிறப்பு புலனாய்விற்கான மத்திய அரசின் விருது: தமிழகத்தை சேர்ந்த 5 அதிகாரிகள் தேர்வு
12 Aug 2022சிறப்பு புலனாய்விற்கான ’மத்திய உள்துறை அமைச்சக விருது 2022’ 151 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கேட்டு டி.ஜ.பி. அலுவலகத்தில் புகார் மனு
12 Aug 2022சென்னை : எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.