முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி பிளாக் விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Arul-Nidhi 2022 07 04

Source: provided

யூடியூப் புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி பிளாக்’. ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார். கதை, காட்டின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் அருள் நிதி முதலாம் ஆண்டு சேர்கிறார். மாலை நேரத்திற்கு பிறகு இக்கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் வருவது ஆபத்து என கல்லூரி நிர்வாகம் எச்சரித்துள்ளது. அப்படி வெளியே சென்றால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள சில மாணவர்கள் வெளியே செல்கின்றனர். கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மாணவர்கள் பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். இதனிடையே அருள்நிதியின் தோழி சுவாதி மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.  இதனை நிர்வாகம் மூடி மறைக்கின்றனர். இதை நம்பாத அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள், மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இறுதியில் கொலையாளியை அருள்நிதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. அருள்நிதியின் முந்தைய திரில்லர் படங்களில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் இல்லை என்பது ஏமாற்றம். கதாநாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ரா தனது பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார். ரோன் எத்தன் யோஹன் பின்னணி இசை ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் கொஞ்சம் மிரட்டலைத் தருகிறது. மொத்தத்தில் டி பிளாக் சுமார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து