Idhayam Matrimony

பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
Ravikumar 2024-08-26

Source: provided

சென்னை : பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விஜய் தரப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் பிடியில் விஜய் சிக்கிக்கொண்டுவிட்டார் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிடுவதைப் பார்க்கிறேன். நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்ததே பா.ஜ.க. சொன்னதால்தான் என முன்பிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க.வுக்குச் செல்லும் சுமார் 14 சதவீத மதச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்க விடாமல் செய்வது, அதன் பின்னர் மராட்டிய மாடலில் தமிழ்நாட்டிலும் அதிகாரத்தைப் பிடிப்பது என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். அதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பவர்தான் விஜய்.

பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்பதும், தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் ரகசிய உறவு இருக்கிறது எனக் கூறுவதும்; காங்கிரஸ் கட்சியோடு தான் நெருக்கமாக இருப்பதுபோன்றத் தோற்றத்தை ஏற்படுத்துவதும் ( இதற்குக் காங்கிரஸ் மேலிடத்தில் சிலர் இடமளிப்பது வேதனையானது) சிறுபான்மையினரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் கையாளும் தந்திரங்கள்.

பா.ஜ.க. அணியில் அவர் சேர்ந்துவிட்டால் இந்த தந்திரங்கள் பலிக்காமல் போய்விடும். அதுமட்டுமின்றி அதி.மு.க. வாக்கு வங்கியும் காப்பாற்றப்பட்டு அதை பலவீனப்படுத்துவது என்ற பா.ஜ.க.- விஜய் நோக்கமும் தோற்றுவிடும். எனவே, பா.ஜ.க. அணியில் அவரைச் சேர்க்காமல் தனித்து நிற்க வைத்து தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறவே பா.ஜ.க. திட்டமிடும் எனக் கருதுகிறேன். பா.ஜ.க.வினர் நடத்தும் அரசியல் நாடகத்தில் அவர்கள் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து