Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      உலகம்
Bus 2025-10-13

Source: provided

ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உஙளள லூயிஸ் டிரைகார்ட் நகரருகே என்1 நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் உருண்டது. மலையடிவார பகுதியில் விழுந்தது. இந்த சம்பவத்தில், தலைகுப்புற பஸ் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உள்ளிட்ட 42 பேர் பலியானார்கள்.

அவர்களில் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளை சேர்ந்த பலர் உள்ளனர். சொந்த ஊருக்கு அவர்கள் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவசரகால குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து