Idhayam Matrimony

ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 13 அக்டோபர் 2025      தமிழகம்
Selvaperunthagai-(Cong )

Source: provided

சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது. காசோலைகள் ஒரே நாளில் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடுகள், தரமற்ற ஸ்கேன் மற்றும் புதிய முறைக்குப் பயிற்சி பெறாத ஊழியர்கள் காரணமாக, பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாகின்றன.  இதன் விளைவாக, ஊழியர்களின் சம்பளம் தாமதமாகி, வியாபாரிகளின் பணபரிவர்த்தனை நின்று போக, தீபாவளி பண்டிகைக்கு முன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

மக்களின் நலனைப் பொருட்படுத்தாமல், வங்கி அதிகாரிகள் 'சிஸ்டம் அப்டேட் நடக்கிறது, உலகளாவிய பிரச்சினை' போன்ற காரணங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை இழுத்தடிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் இந்த அலட்சியத்திற்கு ஆளும் மத்திய பாஜக அரசாங்கமும், ஆர்பிஐ-யும் பொறுப்பு ஏற்று விளக்கம் தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து