முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      உலகம்
Afghanistan 2022 07 04

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் நேற்று காலை மினி பேருந்துகளில் தலிபான் பாதுகாப்புப் படையினர் சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.  ஹெராத் நகரின் மையத்தில் தலிபான் 207 அல்-ஃபாரூக் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்தவ பலர் காயமடைந்துள்ளனர்.

அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியிருந்தாலும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஆனால், ஹெராத் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஷா ரசூல், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!