முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் : தே.மு.தி.க. தலைமை அறிக்கை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
Vijayakant 2022-06-21

Source: provided

சென்னை : விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது. 

இது குறித்து தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தே.மு.தி.க. சார்பில் டி.ஜி.பி .அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து கேப்டன் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தே.மு.தி.க. தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல் இது போன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். விஜயகாந்த்  உடல்நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து