எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்திருக்கிறது. இது, இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய ஒரு நற்சான்றிதழ் ஆகும். ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலயச் சாதனையை நாம் அடைந்திருக்கிறோம்.
நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். சென்னையில் இரண்டு மாநாடுகள் நடந்திருக்கிறது. கோவையில் ஒரு மாநாடும், தூத்துக்குடியில் ஒரு மாநாடும், துபாயில் ஒரு மாநாடும் நடந்துள்ளது. இந்த மாநாடு, ஆறாவது மாநாடாக நடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு காலத்திற்குள் ஆறு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதே ஒரு மிகப்பெரிய சாதனை.
இந்த முதலீட்டு மாநாடுகளுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக, தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மூன்றாவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடைய வேண்டும். நான்காவதாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதன்மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உங்கள் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனுமதிகளையும் பெறுவதற்கும், உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறேன்.
உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்குத் தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசினுடைய இலக்கு. நிதிநுட்பத் தொழில்களை மதிநுட்பத்துடன் நம் மாநிலத்திற்கு ஈர்க்க நினைக்கிறோம். அதன் முதற்கட்டத்திலேயே வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கும்தான். மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப, நம் வளர்ச்சிப் பாதைகளை வகுத்துக் கொண்டால், நமது போட்டித்தன்மை பன்மடங்கு அதிகரிப்பதோடு, உலகளவில், நம்மால் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்க முடியும். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டு காலத்தில், எடுத்த முயற்சிகளின் காரணமாக, இதுவரை 192 ஒப்பந்தங்கள் போட்டப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்.
பல துறைகளிலும் முதலீடுகளை ஈர்த்து, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மாநாடுகளிலேயே இந்த மாநாடுதான் மிகப் பெரிய மாநாடாக அமைந்துள்ளது. வருங்காலங்களில் இதையும் விட பெரிய முதலீட்டு மாநாடுகளை நடத்த வேண்டும் என்று அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
தொழில்துறையின் வளர்ச்சி என்பது அந்தந்த வட்டாரத்தின் சமூக வளர்ச்சியாக மாறி தமிழ்நாடு உன்னத தமிழ்நாடாக, மேன்மையான தமிழ்நாடாக உயர வேண்டும். தமிழ்நாட்டு அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். அந்தத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தகுதி படைத்தவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களும் உருவாக வேண்டும். அதற்கு இத்தகைய முதலீட்டு மாநாடுகள் அடித்தளமாக அமையட்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.


