Idhayam Matrimony

கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Jayakumar 2022-06-05

Source: provided

சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.  

வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது, 

பொதுக்குழுவுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனெனில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதிகளைத் தூண்டி எதிர் தரப்பினர் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

பொதுக்குழு கூட்டம் சட்ட ரீதியாக நடைபெறுவதால் சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுக்குழு நடைபெறாமல் இருக்க வேண்டாதவர்கள் முயற்சி செய்வதாகவும் அதைத் தடுக்கும் வகையில் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஜி.பி. உறுதி அளித்துள்ளார். 

அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும். அதுமட்டுமின்றி அ.தி.மு.க.வில் கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து