முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      இந்தியா
Cauvery 2022-07-05

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்த முடியாத சூழல் என காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு....

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

ஒத்திவைப்பு...

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறவிருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.  

3-வது முறையாக...

ஏற்கனவே தமிழக அரசின் எதிர்ப்பு நிலை காரணமாக ஏற்கனவே ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டமும் தவிர்க்க முடியாக காரணங்களால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழுத் தலைவர் ஹல்தர் தலைமையிலான குழு கடந்த ஜூன் 17-ம் தேதி மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!