முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Madurai-High-Court 2021 12

Source: provided

மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் அவசரம் ஏன் என தமிழக அரசுக்கு கேள்வியும் எழுப்பியுள்ளது.

13 ஆயிரம் இடங்கள்...

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவும் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால் இந்த நியமனத்தில் முறைகேடு நடப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கத் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

புதிய வழிகாட்டு... 

மேலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கோர்ட்டு கூறியதை ஏற்று, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத் தடை இருப்பதால், அதனை விலக்க வேண்டும் என்று வழக்கின் நேற்றைய விசாரணையில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. 

நீதிபதிகள் கேள்வி... 

ஆனால், தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டுமென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? அதற்குப் பதிலாக நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 8-ம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறினர். 

இன்று மாலை வரை...

இதனிடையே தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இந்நிலையில் மதுரைக்கிளை தடை விதித்துள்ளதால் மதுரைக்கிளையின் கீழ் உள்ள மாவட்டங்களில் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து