எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இளையராஜா பெற்றுள்ளார்.
இந்திய நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கடந்த 2018-ல் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இளையராஜா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார்.
மேலும் இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைப்பட இயக்குநர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவின் வீரேந்திர ஹெகடே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகவுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


