முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் சம்பாதித்த சொத்து சூரி - விஷால் உருக்கம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Vishal 2022 07-31

Source: provided

ராணா புரொக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் இணைந்து தயாரிக்கும் படம் லத்தி. இப்படத்தை இயக்கியிருப்பவர் வினோத் குமார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய விஷால், சினிமாவில் நான் சம்பாதித்த சொத்து ரோபோ ஷங்கர் மற்றும் சூரி போன்றோர்கள் தான். என்னை சிரிக்க வைப்பது இவர்கள் தான். நாங்கள் எப்போதும் அடித்துக் கொண்டு தான் விளையாடுவோம். ஒரு முறை நான் சூரியை அறைந்துவிட்டேன் என நினைத்து சங்க பொறுப்பு வந்ததும் விஷால் திமிர் பிடித்து ஆடுகிறான் என்றார்கள். அவர்களிடம் நாங்கள் விளையாடினோம் என்பதை புரியவைப்பதே போராட்டமாகிவிட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!