முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
lavlina 2022 08 04

Source: provided

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டைப் பிரிவில் பிரபல இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

வெண்கலம்...

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார். 

குற்றச்சாட்டு...

2022 பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக லவ்லினா புகார் தெரிவித்தார்.  காமன்வெல்த் கிராமத்திலிருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து காமன்வெல்த் போட்டிகளில் லவ்லினாவுக்குப் பயிற்சியளிக்க அவருடைய பயிற்சியாளர் சந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டார் லவ்லினா.

70 கிலோ பிரிவில்...

ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற லவ்லினா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லவேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எளிதாக வென்ற லவ்லினா, மகளிர் குத்துச்சண்டை 70 கிலோ பிரிவுக்கான காலிறுதிச்சுற்றில் வேல்ஸின் ரோசியுடன் மோதினார். அனுபவம்மிக்க ரோசி, 2018 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இந்தமுறை காலிறுதிச்சுற்றில் லவ்லினாவை 3-2 என்கிற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதியடைந்தார் ரோசி. முதல் இரு சுற்றுகளை லவ்லினா வென்றாலும் அதன்பிறகு பின்னடைவைச் சந்தித்ததால் தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து