முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-2022-ம் ஆண்டில் புதிய சாதனை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 7,203 மில்லியன் யூனிட்களாக உயர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      தமிழகம்
senthil-balaji- 2021 11 29

Source: provided

சென்னை: தமிழகத்தில் 2021--22-ம் ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தி புதிய சாதனையாக 7,203 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பதிவு வருமாறு:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் 2020-2021-ல் 12,555 மில்லியன் யூனிட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தியை, 565 மில்லியன் யூனிட்டுகள் அதிகரித்து 2021-2022-ல் 13,120 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்து சாதித்தது மின் வாரியம்.

2020-2021-ல் 1,06,943 மில்லியன் யூனிட்களாக இருந்த மாநில மொத்த மின் நுகர்வு 2021-22-ல் 9.65 சதவீதம் அதிகரித்த போதும், 1,17,261 மில்லியன் யூனிட்களை வினியோகித்து வரலாறு படைத்தது தமிழ்நாடு மின்சார வாரியம். 2020-21-ல் 61,155 மில்லியன் யூனிட்டாக இருந்த சூரிய ஒளி மின் உற்பத்தியை 1088 மில்லியன் யூனிட்டுகள் அதிகரித்து, 2021-2022-ல் 7,203 மில்லியன் யூனிட்களாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது மின் வாரியம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!