முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தபய ராஜபக்சேவை மேலும் 2 வாரங்கள் தங்க அனுமதியுங்கள் : சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இலங்கை அரசு கோரிக்கை

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      உலகம்
Gothapaya 2022-08-03

Source: provided

கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் நுழைவு இசைவை (விசா) மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்குமாறு சிங்கப்பூா் அதிகாரிகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ம் தேதி கோத்தபய ராஜபக்சே  மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ம் தேதி அவா் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு சென்றார்.  அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து முன்னாள் அதிபர்  கோத்தபய ராஜபக்சேவுக்கு 14 நாள்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.  தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபக்சேவின் விசா வரும் 11-ம் தேதியிடன் முடிவடைவதால் அன்றைய தினம் அவர் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை மேலும் 14 நாள்களுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசு சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனினும், இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க  கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த விசா காலம் மேலும் 14 நாள்களுக்கு சிங்கப்பூா் அரசு நீட்டித்துள்ளது’என்றும், அவர் மேலும் இரண்டு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!