முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி: விண்ணப்ப தேதியை நீட்டிக்க ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக தமிழக அரசு மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்குமாறு அ.தி.மு.க. சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் அது ஜூலை 13-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது. 

இந்த நீட்டிப்பிற்குப் பிறகும், பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, முதல்வர் இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒருவார காலம் அவகாசம் அளிக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!