முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா : ஆட்டநாயகன் ஆவேஷ் கான்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Indian-team 2022-08-07

Source: provided

புதுடெல்லி : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என டி20 தொடரை வென்றது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும் வென்றது.

5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, 4வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீச் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 16 பந்தில் 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 14 பந்தில் 24 ரன்களும் அடித்தனர்.  தீபக் ஹூடா 19 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 31 பந்தில் 44 ரன்களும், சஞ்சு சாம்சன் 23 பந்தில் 30 ரன்களும் அடிக்க, அக்ஸர் படேல் 8 பந்தில் 20 ரன்கள் அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது இந்திய அணி.

192 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அதுமட்டுமல்லாது அக்ஸர் படேலை தவிர மற்ற அனைத்து பவுலர்களுமே ரன்களை எளிதாக விட்டுக்கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். ரன் எடுக்க முடியாத விரக்தியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ஆட்டமிழந்தனர்.

அக்ஸர் படேல் மட்டும் 4 ஓவரில் 48 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து பவுலர்களும், குறிப்பாக ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக பூரன் மற்றும் பவல் ஆகிய இருவரும் தலா 24 ரன்கள் அடித்தனர். இந்திய பவுலர்களிடம் சரணடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 19.1 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஆவேஷ் கான் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆரம்பத்தில் அபாரமாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி கொடுத்த ஆவேஷ் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என டி20 தொடரை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து