முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டில் மாஸ்க் கட்டாயம் தலைமை நீதிபதி உத்தரவு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      இந்தியா
supreme-court-2022-08--11

Source: provided

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அலை உலகையே அச்சுறுத்தி வந்த போது, வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து உலாவும் நிலை பலருக்கு ஏற்படும் படி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அதன் பிறகு , தடுப்பூசி, கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வந்த பின்பு அது கொஞ்சம் அனைத்தும் சரியாக தொடங்கியது. தற்போது மீண்டும், கொரோனா, குரங்கு அம்மை என அச்சுறுத்தல்கள் வர தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், தற்போது, புதிய உத்தரவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் வாதாடும் போதும் மாஸ்க் காட்டயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து