எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளுவர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட கலெக்டர்களுக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கும் நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.
செங்கல் சூளை கொத்தடிமைகளை மீட்டு அவர்களே செங்கல் சூளை நடத்த வகை செய்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருநங்கைகளின் அடிப்படை தேவையை நிறைவேற்றி வளர்ச்சிக்கு வழிவகுத்த சமூக நல அலுவலருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கலெக்டருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணி மரச்செடிகள் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரித்த நீலகிரி மாவட்டத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. காணி ஒருங்கிணைந்த வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்துக்காக நெல்லை மாவட்டத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும், இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காகவும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருப்பை, கருமுட்டை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சொந்த ஆதார வருவாயினை புவிசார் தகவல், ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அடிக்கப்படுத்திய சென்னை மாநகராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


