முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமர்சனத்தைத் தொடர்ந்து இலவச பஸ்கள் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாற்ற நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Pink-bus 2022 01 12

விமர்சனத்தை தொடர்ந்து இலவச பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்துகொள்ள ஏதுவாக பேருந்து முன்பும், பின்பும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிங்க் பேருந்துகளில் முழுமையாக அல்லாமல் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் மட்டும் வண்ணம் தீட்டப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.

அவசரகோலத்தில் இப்படி அரைகுறையாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்தனர். மேலும் இந்தப் பேருந்துகளின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டு கேலிப் பதிவுகளும் பகிரப்பட்டன. இந்நிலையில் பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.விரைவில் அனைத்து பேருந்துகளிலும் முழுமையான பிங்க் வண்ணம் தீட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து