முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக யானைகள் தினம்: யானைகளை பாதுகாப்போம்: : பிரதமர் நரேந்திரமோடி டுவீட்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi 2022 07 29

Source: provided

புதுடெல்லி : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி டுவீட் செய்துள்ளார்.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி (நேற்று)உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. வனத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. யானைகளை பாதுகாக்க உலகத்திலுள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் உலக யானைகள் தினத்தை கடைப்பிடிக்கின்றன.

இந்த நிலையில், உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாப்பதில் எங்களின் நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்கிறோம். ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

யானை பாதுகாப்பில் உள்ள வெற்றிகள், மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் உணர்வை மேம்படுத்துவதில் பெரிய முயற்சிகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து