முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      உலகம்
Sri-Lanka 2022 01 12

வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். பல அமைப்புகளையும் அவர்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கை, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், பிரிட்டீஷ் தமிழ் அமைப்பு ஆகிய 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. மேலும் 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடம் உதவியை எதிர்பார்த்து வெளிநாடுவாழ் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து