முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின உரையில் பிரதமர் பட்டியலிட்ட ஐந்து உறுதிமொழிகள்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi-1 2022-08-15

சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமான காலகட்டம் என்று கூறிய பிரதமர் மோடி அந்த 5 உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார்.

பிரதமர் மோடி உரையிலிருந்து: "ஜனநாயகத்தின் தாய் இந்தியா. இந்திய தேசம் கடந்த 75 ஆண்டுகள் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது. நாம் பல சாதனைகளைக் கண்டுள்ளோம். அதேவேளையில் இயற்கைப் பேரிடர், போர் எனப் பல சறுக்கல்களையும் எதிர்கொண்டுள்ளோம். நம் நாட்டின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் தன்மையே நம்மை வழிநடத்தும் சக்தியாக இருந்துள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று கோரினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பெருமையைக் கொண்டாடத் திரண்டுள்ளனர்" என்றார்.

5 உறுதிமொழிகள்:

"நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக் கொள்வோம். கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது" என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

இந்த 5 உறுதிமொழிகளையும் ஏற்று நாட்டு மக்கள் பின்பற்றினால் இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும். நம் விடுதலை வீரர்களின் கனவு நிறைவேறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து