முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      இந்தியா
Mukesh-Ambani 2022-08-15

Source: provided

மும்பை : முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறது. முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்க் சொந்தமான மருத்துவமனைக்கு நேற்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர் தன்னை பயங்கரவாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அடுத்தடுத்து 4 முறை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்தது.

இதையடுத்து, டிபி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து