எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களது இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளைப் பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.
மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பாஜக.விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது. தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.
பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.
தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு தீப ஒளித் திருநாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளி கிடைக்க அழிக்கப்பட வேண்டிய தீமைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முதன்மையானது மக்களை சீரழிக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது மட்டும் தான்.
விலைவாசி உயர்வு, வரிக்கொடுமை, வேலைவாய்ப்பின்மை, சட்டம் & ஒழுங்கு சீர்குலைவு என அழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் அகற்றுவதற்கான தீர்வு உங்களின் கைவிரல் நுனியில் தான் உள்ளன. அதை ஒருமுறை செய்தால் தமிழ்நாட்டில் இருள் இன்றுடன் முடிவுக்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “ இந்த தீபாவளியில் வலிமையான பாரதம் அமைந்திருப்பதால் அடுத்த தீபாவளிக்கு வளமான தமிழகம் அமைய வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும், உள்நாட்டின் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைத்திறன் தீபாவளி ஒளியாக அமைந்து நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
அதே போல அடுத்த ஆண்டின் தீபாவளியில் வளமான தமிழகம் அமைந்திருக்க இருள்நீக்கி ஒளி தரும் தீபாவளி நல்வழிக் காட்டட்டும். தமிழக மக்களுக்கு சுமைகள், தீமைகள் நீங்கி, நன்மைகள் நிறைந்து, இன்பங்கள் மிகுந்து, வாழ்வு சிறக்கும் வகையில் தீபாவளி திருநாள் அமைய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக திகழ்கிறது தீபாவளி திருநாள்.வீடுகள் தோறும் பூத்தரி தெறிக்கும் மாலைப்பொழுதுகளும், வீதிகளெங்கும் வான வேடிக்கைகள் நடைபெறும் இரவுப்பொழுதுகளும், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிறுத்துகின்றன.
இன்பங்கள் நிறைந்த இந்நாளில் நாடு வளம் பெறவும்; சமூக நல்லிணக்கம் வலிமை பெறவும் உறுதி ஏற்போம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாச்சாரத்தை பாதுகாப்போம். தீபாவளி கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.
இயந்திர வாழ்க்கையில் சந்திப்புகள் குறைந்து போன உறவுகள் கூடிக் குலவவும், உள்ளங்கள் மகிழ்ந்துறவாடவும் விழாக்கள், கொண்டாட்டங்கள் ஊக்கமளிக்கின்றன. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் பண்டிகைகள் மனிதர்கள் வாழ்வில் மலர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
மக்களிடையே மனித நேயம் மலர்ந்திட, மாற்றங்கள் தொடர்ந்திட, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, அன்பு, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை பெருகிட, இல்லாமை எனும் இருள் விலகி, இன்ப ஒளி பிரகாசித்து, இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பும், ஆனந்தமும் செழித்து, மக்கள் யாவரும் மாசில்லா தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
பயம் உன்னை விடாது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 Oct 2025எஸ்.கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பயம் உன்னை விடாது.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பைசன் திரை விமர்சனம்
19 Oct 2025சர்வதேச கபடி போட்டியில் களம் கண்ட ஒரு சாதாரான கபடி வீரரின் வலி மிகுந்த கடந்து வந்த பாதைதான் பைசன் படக் கதை.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
19 Oct 2025மேட்டூர் : வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
19 Oct 2025சென்னை : ராமதாஸ்- அன்புமணி வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
சேலம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நா.த.க. வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் : மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி
19 Oct 2025மேட்டூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்