முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      உலகம்
Suicide 2023 04 29

மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.

மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகத்தில் 14 இந்தியர்கள் உள்பட பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு வியாழக்கிழமை கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு விபத்தில் இந்தியர்கள் மூவர் உள்பட பலியானதற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே விபத்தில் காயமடைந்து பெய்ராவில் சிகிச்சை பெற்று வரும் இந்தியரை, தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த விபத்துக்கான சரியான காரணம் மற்றும் படகில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து