முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கெவின் ஓ பிரையன் ஓய்வு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Kevin-O Brien 2022-08-16

Source: provided

அயர்லாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் (37 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2006ல் அறிமுகமான கெவின், இதுவரை 3 டெஸ்ட், 153 ஒருநாள் மற்றும் 110 டி20 போட்டிகளில் விளையாடி 5850 ரன்கள் மற்றும் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அயர்லாந்து கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் வரலாற்று வெற்றிகளை பெற கெவின் ஓ பிரையனின் பங்கு மிக முக்கியமாகும். குறிப்பாக கெவின் ஓ பிரையன் 2011 ஐசிசி உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.அவரது சதம் அப்போது உலகக் கோப்பையில் அதிவேக சதம். 

_____________

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணி அறிவிப்பு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியை முகமது நபி தலைமை தாங்குகிறார்.

ஆசிய கோப்பை டி20 கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விபரம்:- முகமது நபி (கே), நஜிபுல்லா ஜத்ரான், அஃப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், பரித் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் உர் ரஹ்மான், நஜிபுல்லா சத்ரான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷித் கான் மற்றும் சமியுல்லா ஷின்வாரி. நிஜாத் மசூத், கைஸ் அஹ்மத் மற்றும் ஷரபுதீன் அஷ்ரஃப் ஆகிய மூன்று வீரர்கள், கூடுதல் வீரர்களாக உள்ளனர்.

_____________

ஐ.எல். டி-20 - நைட்ரைடர்ஸ் அணியில் பிரபல வீரர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய டி20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. சர்வதேச லீக் டி20 என்கிற ஐஎல்டி20 போட்டியில் அதிகச் சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்துகொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

இந்நிலையில் அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள்: சுநீல் நரைன், ரஸ்ஸல், அகேல் ஹூசைன், ரேமான் ரீஃபர், கென்னர் லூயிஸ் (மே.இ. தீவுகள்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து), லஹிரு குமாரா, சரித் அசலங்கா, சீக்குக் பிரசன்னா (இலங்கை), காலின் இங்க்ரம் (தென்னாப்பிரிக்கா), அலி கான் (அமெரிக்கா), பிராண்டன் குளோவர் (நெதர்லாந்து).

_____________

4-வது டி20 போட்டியில் ஆப்கான் அணி வெற்றி

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. இறுதியில்,அயர்லாந்து 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டாக்ரெல் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கிறது. தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து