முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      இந்தியா
CM-2 2022-08-17

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் இருந்து வரும் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 14வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதன் பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சுமார் 20 நிமிட நேரம் பேசினர்.

பின்னர் டெல்லியிலுள்ள அமைந்துள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து