எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: அ.தி.மு.க. அலுவலக சாவி வழக்கில், வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இ.பி.எஸ்.., ஓ.பி.எஸ். சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் கேட்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.
இதனைதொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


