எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அ.தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னைகள் முடிவுக்கு வரும் வரை சின்னத்தை முடக்கக் கோரி ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜோசப் தாக்கல் செய்த வழக்கை, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அ.தி.மு.க. பொதுச் செயலர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையிலான பிரச்னை ஜாதி ரீதியிலான பிரச்னையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அந்தக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஜூன் 28-ஆம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து அ.தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறி, பி.ஏ.ஜோசப்புக்கு ரூ. 25,000 அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜோசப் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


