முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் பரபரப்பு: ஆளில்லாத படகிலிருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      இந்தியா
AK-47------------2022-08-18

Source: provided

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியைச் சேர்ந்த கடற்கரையில் ஆளில்லாத படகு ஒன்று நீண்ட நேரம் கடலில் தத்தளித்துள்ளது. இதனைக் கண்ட கடலோரக் காவல்படை அப்படகிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஏகே - 47 ரக துப்பாக்கிகள் உள்பட சில ஆயுதங்கள் அடங்கிய பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பையில்  இன்னும்  10 நாள்களில் விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளதால் இது பயங்கரவாத ஊடுருவலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய இந்த படகு குறித்து  விசாரணை மேற்கொள்ள மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ராய்காட் எம்எல்ஏ அதிதி தாட்கரே கோரிக்கை வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து